உச்சி முதல் பாதம் வரை ஆப்ரிகாட் பழத்தின் நன்மைகள்..!

ஆப்ரிகாட் பழத்தில் இரும்பு, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், பைபர் எனப்படும் நார்ச்சத்து, வைட்டமின் சி, ப்ரோட்டீன் போன்ற பல அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
ஆப்ரிகாட் பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன மற்றும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றது.
நம் உடலின் எலும்புகளை வலுப்படுத்துவதற்கு உதவும் அத்தியாவசிய ஊட்டச்சத்தான கால்சியம் ஆப்ரிகாட் பழங்களில் நிறைந்து காணப்படுகிறது
ஆப்ரிகாட் பழத்தில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் புற்றுநோயை எதிர்க்கும் பண்புகளைக் கொண்டிருப்பதாக ஆராய்ச்சியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்ரிகாட்டில் உள்ள பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. இது பார்வை திறனை ஆரோக்கியமாக பராமரிக்க வழிவகுக்கிறது.
ஆப்ரிகாட் பழத்தில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது.
ஆப்ரிகாட் பழத்தில் நார்ச்சத்து சிறந்து காணப்படுகிறது. இது மலச்சிக்கலைத் தடுக்கவும் ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிக்கவும் உதவுகிறது.
ஆப்ரிகாட் பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது ரத்த அழுத்தத்தை சீராக வைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.