வாழைத்தண்டு சூப் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்..!
இதில் கால்சியம், வைட்டமின் பி6, பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கவும், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
இதில் அதிகப்படியான நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது செரிமான மண்டலத்தை மேம்படுத்தக்கூடும்.
கோடை காலங்களில் உடல் வெப்பத்தைக் குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் தன்மை வாய்ந்தது.
உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
வாழைத்தண்டு சிறுநீரை பெருக்கும் தன்மையுடையது. இது சிறுநீரகக் கற்களைக் கரைத்து, நீர் எரிச்சலையும், சிறுநீர் தொடர்பான பிரச்சனைகளையும் சரிசெய்ய உதவுகிறது.
வாழைத்தண்டு அதிகப்படியான நார்ச்சத்தை கொண்டுள்ளது. இது ஆரோக்கியமான உடல் எடை குறைப்புக்கு வழிவகுக்கிறது.