இரவில் ஒரு ஏலக்காய் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!
Photo: freepik
இரவு உணவு உட்கொண்ட பிறகு ஒரு ஏலக்காயை மென்று சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்தும். வயிற்று பிரச்சினைகளுக்கு சிறந்த இயற்கை தீர்வாகவும் அமையும்.
Photo: freepik
ஏலக்காயில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாய்வழி பாக்டீரியாவை எதிர்த்து போராடும். அதனால் வாய் துர்நாற்றத்தை போக்கி புத்துணர்ச்சியான சுவாசத்தை அளிக்கும்.
Photo: freepik
ஏலக்காயில் இருக்கும் சேர்மங்கள் நரம்புகளை தளர்த்த உதவும். மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கும். தூக்க தரத்தை மேம் படுத்துவதற்கும், அமைதியான இரவிற்கும் பங்களிக்கும்.
Photo: freepik
ஏலக்காயில் இருக்கும் டையூரிடிக் பண்புகள் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை வெளியேற்றவும், சிறுநீரகங்களை சுத்தப்படுத்தவும் துணைபுரியும். கல்லீரல் செயல்பாட்டையும் ஊக்குவிக்கும்.
Photo: freepik
ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்த ஏலக்காய், உடலில் கொழுப்பு அளவை குறைப்பதன் மூலமும், ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் ஒட்டுமொத்த இதய செயல்பாட்டை மேம்படுத்தும்.
Photo: freepik
ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்த பொருளான ஏலக்காய், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.
Photo: freepik
அசிடிட்டி, நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்தை குறைக்கும். தொண்டையில் சளி படிவதையும் தடுக்கும். தொண்டை புண்ணை ஆற்றும்.