தினமும் ஒரு கைப்பிடி அளவு மக்காச்சோளம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!
மக்காச்சோளத்தில் வைட்டமின் பி, சி, ஈ மற்றும் பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீசு ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன.
மக்காச்சோளத்தில் நிறைந்திருக்கும் கால்சியம், எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும்.
இதில் உள்ள ஆக்சிஜனேற்றிகள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவி செய்யும்.
மக்காச்சோளத்தில் தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது கெட்ட கொழுப்பை குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
இதில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சினையை தடுக்கக்கூடும்.
மக்காச்சோளம் ஆன்டி ஆக்சிடண்ட்டுகளின் மூலமாகும். இது புற்றுநோய் அபாயத்தை தடுக்கலாம்.
மக்காச்சோளம் வைட்டமின் சி-ன் நல்ல மூலமாகும். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.
மக்காச்சோளத்தில் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் உள்ளது. இது கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுகிறது.