வேகவைத்த முட்டை - ஆம்லெட்; எது சிறந்தது என தெரியுமா?
credit: freepik
முட்டையை வேக வைத்தோ அல்லது ஆம்லெட் தயாரித்தோ ருசிக்கவே பலரும் விரும்புகிறார்கள். இதில் எதை சாப்பிடுவது சிறந்தது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
credit: freepik
குறைந்த கலோரியுடன் உடல் எடையை சீராக நிர்வகிக்கும் உணவு பழக்கத்தை மேற்கொள்ள ஆர்வம் காட்டுபவர்களுக்கு வேகவைத்த முட்டை ஏற்றது.
credit: freepik
வேக வைத்த முட்டை எளிதாக ஜீரணமாகும். செரிமான பிரச்சினை உள்ளவர்களுக்கும் ஏற்றதாக அமையும்.
credit: freepik
மேலும் இதில் புரதம் அதிகம் உண்டு. எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் டி, மூளை செயல்பாட்டிற்கு அவசியமான வைட்டமின் பி12 ஆகிய ஊட்டச்சத்துக்களையும் வழங்கும்.
credit: freepik
வேகவைத்த முட்டைகள் கொழுப்புகள் சேர்க்கப்படாமல் ஊட்டச்சத்துக்களை தக்கவைக்கும் தன்மை கொண்டது.
credit: freepik
கலோரி, கொழுப்பு உட்கொள்ளலை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் ஆம்லெட்டை தவிர்ப்பது நல்லது.
credit: freepik
ஆம்லெட் விரும்புபவர்கள் அதில் ஊட்டச்சத்துமிக்க காய்கறிகளை சேர்த்து உட்கொள்வதுதான் சிறந்தது. அதிலும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த பொருட்களை ஆம்லெட்டில் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.