சுரைக்காயை அடிக்கடி எடுத்துக்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட உப்புகள் அனைத்து சிறுநீரகத்தின் வழியே வெளியேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
credit: freepik
அஜீரண கோளாறு உள்ளவர்கள் சுரைக்காய் சாப்பிடலாம். கோடைக் காலத்தில் சுரைக்காய் சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. மேலும் நாவறட்சியை போக்கும்.
credit: freepik
கை கால் எரிச்சல் நீங்க சுரைக்காயின் சதைப் பகுதியை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் எரிச்சல் குறையும். உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள விரும்பினால் சுரைக்காயை பயன்படுத்தலாம்.
credit: freepik
நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி சாப்பிட்டு வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.
credit: pixabay
வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க சுரைக்காயின் சதைப் பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும்.
credit: pixabay
சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து வந்தால் பித்தம் சமநிலை அடையும். சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வை கொடுத்து உடலை வலுப்படுத்தும்.
credit: pixabay
சுரைக்காயில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், ரத்தத்ததில் சர்க்கரை உறிஞ்சுதல் வேகத்தை குறைத்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த செய்கிறது. மேலும், உடலில் நீரேற்றத்தை பராமரிக்கவும் உதவி புரிகிறது