வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை கட்டுப்படுத்த உதவும் சமையலறை பொருட்கள்!
credit: freepik
சுக்கு: செரிமானம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. மேலும் இது அஜீரணத்தை நீக்கும். உடலில் 'வாதம்' சமநிலைப்படுத்த உதவுகிறது.
மஞ்சள்: சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் சிறந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்ட இது, உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் சமநிலைப்படுத்துகிறது.
credit: freepik
மிளகு: நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. உடலில் இது கபத்தை சமநிலைப்படுத்துகிறது.
credit: freepik
பூண்டு: வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்த இது வாதம், பித்தம், கபம் மூன்றையும் சமநிலைப்படுத்த உதவுகிறது.
credit: freepik
சீரகம்: செரிமானத்திற்கு உதவுகிறது. உடலில் பித்தத்தை சமநிலைப்படுத்துகிறது. வயிற்று உப்புசத்தை குறைக்க சிறந்தது.
பெருங்காயம்: செரிமானத்துக்காக பயன்படுத்தப்படும் கை வைத்திய முறையில் பெருங்காயத்துக்கு முதல் இடம் உண்டு. மேலும் வயிற்று உப்புசம், வயிற்று வலி மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்தும்.
credit: freepik
வெந்தயம்: வெந்தய விதைகளில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலை போக்கவும் உதவுகிறது.