சர்க்கரை நோயாளிகள் கருப்பு உலர் திராட்சை சாப்பிடலாமா?

metaAI
கருப்பு திராட்சையில் அதிகமான அளவு வைட்டமின் சி, வைட்டமின் ஏ,கே,பி காம்ப்ளக்ஸ் மற்றும் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், மாங்கனீஸ், காப்பர், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
வி.சத்தியநாராயணன்
metaAI
கருப்பு உலர் திராட்சையின் கிளைசெமிக் இன்டெக்ஸ் 43. இதன் கிளைசெமிக் லோடு 11. இந்த இரண்டு குறியீடும் குறைவு என்பதால் சர்க்கரை நோயாளிகள் கருப்பு திராட்சையை உட்கொள்ளலாம்.
metaAI
இருந்தாலும் இதில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் மிதமான அளவு மட்டுமே சாப்பிடுவது நல்லது.
metaAI
கருப்பு உலர் திராட்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்டான ரெஸ்வரேட்ரால், சர்டூயின் என்ற புரதத்தை தூண்டி ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுவதாக ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.
metaAI
இதில் இருக்கும் ஆன்தோசயனின் ஆன்டியாக்ஸிடன்ட் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்தும் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.
metaAI
இதில் உள்ள பொட்டாசியம், ரத்த நாளங்களை தளர்வடையச் செய்து ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
metaAI
கருப்பு உலர் திராட்சையில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி சாப்பிட்டவுடன் உடனே ஏற்படும் குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் வராமல் தடுக்கிறது.
metaAI
கருப்பு உலர் திராட்சைகளில் அடங்கியிருக்கும் ஆன்டியாக்ஸிடன்ட்ஸ் புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.
metaAI
Explore