பனங்கிழங்கை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?

இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி, சாப்பிட்டவுடன் ஏற்படும் குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் வராமல் தடுக்க உதவுகிறது.
இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் நுண்ணுட்ட சத்துக்கள் கணையத்தில் இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கச் செய்து ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.

மெக்னீசியம் நீரிழிவு ரெட்டினோபதி மற்றும் நரம்பு பாதிப்பு ஆகியவற்றை தடுக்க உதவுவதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதிலுள்ள வைட்டமின் சி, இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கச் செய்து, இன்சுலின் திறம்பட செயல்பட வழிவகுக்கிறது.
பனங்கிழங்கில் உள்ள அதிகமான இரும்புசத்து, ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது.
இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீர்படுத்த உதவுவதோடு இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
பனங்கிழங்கில் உள்ள அதிகமான அளவு நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி, செரிமானத்தை மேம்படுத்துகிறது.
பனங்கிழங்கில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பனங்கிழங்கின் கிளைசெமிக் இன்டெக்ஸ் (சர்க்கரை உயர்தல் குறியீடு) மற்றும் கிளைசெமிக் லோடு குறைவு என்பதால் சர்க்கரை நோயாளிகள் இதனை பயமின்றி உட்கொள்ளலாம்.