காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிடலாமா?

all photo using AImeta
தினசரி நாளை ஆப்பிளுடன் தொடங்குவதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். ஊட்டச்சத்தின் ஆற்றல் மையமாக உள்ள இது குறைந்த கலோரிகளை கொண்டிருப்பதால் ஆரோக்கியமான சிற்றுண்டிக்கு ஏற்ற ஒன்றாக இருக்கும்.
இவற்றில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் மற்றும் நார்ச்சத்து கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
ஆப்பிள்கள் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்களின் நல்ல மூலமாகும். இது ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிடுவது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.
ஆப்பிளில் காணப்படும் நார்ச்சத்து வயிற்றை நிறைவாக உணர வைக்கிறது. இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடை குறைப்புக்கு வழிவகுக்கும்.
காலை நேரத்தில் சிவப்பு ஆப்பிள்கள் சாப்பிடுவது ஆற்றலை அளிக்கும். இது இயற்கையாக ஆற்றலின் சிறந்த மூலமாகும்.
ஆப்பிள் ஆன்டி- ஆக்ஸிடன்ட் நிறைந்த பழம். இது நுரையீரல் அழற்சி தொடர்பான ஆஸ்துமா அலர்ஜியை கட்டுப்படுத்த செய்யும்.
ஆப்பிளில் உள்ள பாலிபினால்கள் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கின்றன.
ExploreExplore