நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் காலை உணவு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும் உதவும்.
credit: freepik
காலை உணவை தொடர்ந்து தவிர்த்து வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவில் மாற்றம் ஏற்பட்டு டைப்-2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்க செய்துவிடும். ஏனெனில் இன்சுலின் உணர்திறன், குளுக்கோஸ் செயல்திறனை பாதிக்கும். அதன் காரணமாக நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
credit: freepik
தினமும் காலை உணவைத் தவிர்ப்பது மதிய உணவை அதிகமாக சாப்பிட வைத்துவிடும். இதுவும் ரத்தத்தில் சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்க செய்வதோடு உடல் எடை அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும்.
credit: freepik
தொடர்ந்து காலை உணவை தவிர்ப்பது உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதய நோய்கள் ஏற்படவும் காரணமாகிவிடும்.
credit: freepik
காலையில் எழுந்ததும் ஒரு மணி நேரத்துக்குள் காலை உணவை உட்கொள்வது சிறந்தது. அந்த உணவில் புரதம், நார்ச்சத்து நிறைய இடம் பெறுவது நல்லது.
credit: freepik
காலை உணவைத் தவிர்ப்பது நாள் முழுவதும் எரிச்சல் உணர்வை உண்டாக்கலாம். உடலில் செரோடோனின் அளவு குறைவது அதற்கு காரணமாக அமைந்திருக்கும்.
credit: freepik
எனவே, காலையில் உணவு எடுத்து கொள்வது மிகவும் முக்கியம் என்றும், அதில் புரோட்டின், கார்போஹைட்ரேட் உள்ளிட்ட சரிவிகித உணவை உண்ண வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.