குளியல் வகைகளும், அந்த குளியல்கள் தரும் நன்மைகளும்!

credit: freepik
மண் குளியல்: உடல் சூட்டை தணிப்பது, சரும பிரச்சினைகளை விரட்டுவது, தசை வலிகளை குறைப்பது என இந்த குளியலுக்கு அசாத்திய ஆற்றல் உண்டு. மண்ணில் உள்ள தாதுக்கள் உடலில் இருந்து நச்சுக்களை உறிஞ்சுவதோடு உடலை சுத்தப்படுத்தும்.
credit: MetaAI
பால் குளியல்: உலக பேரழகியாக திகழ்ந்த கிளியோபாட்ரா இன்று இளம் பெண்கள் விரும்பி உபயோகிக்கும் சீரம் ஆயில் பயன்படுத்திய தில்லை. ஆனால் பாலில் குளிக்கும் வழக்கத்தை தொடர்ந்து பின்பற்றினார். அது சருமத்தை மென்மையாகவும், பொலிவாகவும் உணர வைப்பதாக அறியப்படுகிறது.
credit: freepik
வாழை இலை குளியல்: உடலில் மெலடோனின் ஹார்மோனின் சுரப்பை சீராக்கும் தன்மை வாழை இலை குளியலுக்கு இருப்பதால் தூக்கமின்மை பிரச்சினைக்கு தீர்வு தரும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடையைக் குறைக்கவும் வித்திடும்.
credit: MetaAI
குளிர்ந்த நீர் குளியல்: குளிர்ந்த நீரில் குளிப்பது சருமம் தளர்வடையாமல் இறுக்கமாக காட்சியளிக்க உதவும். வியர்வை மற்றும் சரும துளைகளை குறைக்கவும் வித்திடும். நரம்புகளை தூண்டி சோம்பலை போக்கி மன அழுத்தத்தை குறைக்கவும் செய்யும்.
credit: freepik
வெந்நீர் குளியல்: உடல் வலியால் அவதிப்படுபவர்களுக்கு வெந்நீர் குளியல் ஏற்றது. இந்த குளியல் தசைகளை தளர்த்தி தசை வலியை போக்க வல்லது. அதிலும் இரவில் வெந்நீர் குளியல் போடுவது ஆழ்ந்த தூக்கத்தை அனுபவிக்க வழிவகை புரியும்.
credit: freepik
சாதாரண குளியல்: இது தினமும் இயல்பாக சாதாரண நீரில் குளிக்கும் முறை. அழுக்கு, வியர்வை மற்றும் கிருமிகளை நீக்கி உடலை சுத்தமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க இந்த குளியல் முறை உதவும்.
credit: freepik
எண்ணெய் குளியல்: எண்ணெய் தேய்த்து குளிப்பது உடல் சூட்டை தணித்து, சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க துணை புரியும். மேலும் வாதநோய்களை குணப்படுத்தவும், தலைமுடியை வலிமையாக்கவும் உதவிடும்.
credit: freepik
Explore