"முடிஞ்சா வந்து தொடுங்கடா.." சீறி வரும் காளைகளை அடக்கும் காளையர்கள்!

ஆண்டுதோறும் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறுவது வழக்கம்.
பொங்கல் தினத்தன்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடக்கும்.
இதற்கு அடுத்தடுத்த நாட்களில் பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறுவது வழக்கம்.
பல்வேறு கட்ட சோதனைக்கு பின்பு அவனியாபுரத்தில் விளையாட தகுதி வாய்ந்த 1100 காளைகளும், சுமார் 600 வீரர்களுக்கும் பங்கேற்றனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், வாடிவாசலில் இருந்து 870 காளைகள் அவிழ்க்கப்பட்ட நிலையில், 461 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கி பரிசுகளை வென்றனர்.
அலங்காநல்லூரில் சிறந்த 1,100 காளை​களுக்கு போட்​டி​யில் பங்​கேற்க டோக்​கன் வழங்கப்பட்டது. 600 மாடு​பிடி வீரர்​கள் களம் இறங்கினர்.
போட்​டி​யில் அதிக காளை​களை அடக்​கும் சிறந்த வீரருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. 2-வது பரிசாக இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.
Explore