யாருமே சொல்லித்தராத சமையல் டிப்ஸ்..!

அசைவ இறைச்சிகள் கழுவும் போது உப்பு, மஞ்சள் தூள் போட்டு சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கழுவினால் வாடை வராமல் இருக்கும்.
ஸ்வீட் வகைகள் செய்யும்போது ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக்கொண்டால் இனிப்பு தூக்கலாக தெரியும்.
வத்தல் குழம்பு, மீன் குழம்பில் இறுதியாக சிறிது வெல்லம் சேர்த்தால் குழம்பு ருசி அதிகரிக்கும்.
தேங்காய்ப் பாலில் பொட்டுக்கடலையை பொடி செய்து சேர்த்து உப்பு சேர்த்து தாளித்து இறக்கினால் அவசர சட்னி ரெடி.
சாதம் மஞ்சளாக இருந்தால் சாதம் வடிக்கும் நேரத்தில் ஒரு துண்டு புளியை சேர்த்து பிறகு வடித்தால் சாதம் வெண்மையாக இருக்கும்.
மாவில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து பதினைந்து நிமிடங்கள் கழித்து தண்ணீர் கொதித்தவுடன் இட்லி ஊற்றினால் இட்லி பஞ்சு போல இருக்கும்.
இஞ்சிபூண்டு அரைக்கும் பொழுது சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் பிரெஷ்ஷாக இருக்கும்.
ஈரமான பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றிக் கலக்கினால் வெள்ளைக்கரு பாத்திரத்தில் ஒட்டி வீணாவதை தவிர்க்கலாம்.
வெள்ளை உளுந்தை வறுத்து விழுதாக அரைத்து தக்காளி சட்னியுடன் சேர்த்தால் சட்னி கம கம வாசனையாக இருக்கும்.