கெட்ட கொழுப்பை கரைக்கும் கறிவேப்பிலை புதினா ஜூஸ்..!

metaAI
கறிவேப்பிலையில் கெட்ட கொழுப்புக்களை எரிக்கும் பொருள் அதிகம் உள்ளது. கறிவேப்பிலை செரிமான பிரச்சனைகளைப் போக்கும். உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும்.
metaAI
தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, புதினா இலை, இஞ்சி சிறிய துண்டு, நாட்டு சர்க்கரை அல்லது பனங்கல்கண்டு, தண்ணீர், எலுமிச்சைச் சாறு ஆகியவை
metaAI
செய்முறை: முதலில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, இஞ்சி ஆகியவையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
metaAI
பின்னர் நாட்டு சர்க்கரை அல்லது பனங்கல்கண்டு, சிறிது தண்ணீர் மற்றும் நறுக்கி வைத்ததை சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
metaAI
நன்கு அரைத்தவுடன் மீதம் இருக்கும் தண்ணீர் சேர்த்து வடிகட்டி எலுமிச்சைச்சாறு சேர்க்கவும்.
metaAI
தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகள் சேர்த்து ஜில்லென்று பரிமாறவும். சூப்பரான கறிவேப்பிலை புதினா ஜூஸ் ரெடி.
metaAI
இந்த ஜூஸை வாரம் மூன்றுநாள் குடித்து வந்தால் வெயிலினால் ஏற்படும் பிரச்சினையில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.
metaAI
Explore