சுவையான முட்டை வெஜிடபிள் கட்லெட் செய்முறை!

Photo: MetaAI
தேவையான பொருட்கள்: வனஸ்பதி, மைதா, பால், வேகவைத்த முட்டை, கலக்கிய முட்டை, இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, உப்பு, மிளகாய்த்தூள், பிரட்தூள், வெங்காயம், நறுக்கி வேகவைத்த காய்கறிகள், எண்ணெய்
Photo: MetaAI
செய்முறை; வனஸ்பதியை வாணலியில் போட்டு உருக்கிக்கொண்டு மைதா சேர்த்து 1 நிமிடம் குறைந்த தணலில் நிறம் மாறாமல் வறுக்கவும்.
Photo: MetaAI
அதில் இளஞ்சூடான பாலை சிறிது சிறிதாகச் சேர்த்து கலந்துகொண்டே, கெட்டியாக சாஸ் போல வரும்வரை கிளறிவிடவும்.
Photo: MetaAI
வெந்ததும், அதோடு வதக்கிய வெங்காயம், வேகவைத்த காய்கறிகள், துண்டுகளாக நறுக்கிய முட்டைகள் அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
Photo: MetaAI
ஆறிய பிறகு கட்லெட் வடிவில் தயாரித்துக்கொண்டு, கலக்கி வைத்துள்ள முட்டையில் தோய்த்து பிரட் தூளில் புரட்டி எடுக்கவும்.
Photo: MetaAI
பின்னர், சூடான எண்ணெய்யில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
Photo: MetaAI
இந்த முட்டை வெஜிடபிள் கட்லெட், சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.
Photo: MetaAI
Explore