தமிழ்நாடு தினம் ஜூலை 18-ம் தேதி கொண்டாடப்படுவது ஏன் என்று தெரியுமா?
Photo: pixabay
நாட்டின் விடுதலைக்கு பிந்தைய மெட்ராஸ் மாகாணத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பேசுபவர்கள் பரவலாக இருந்தார்கள்.
Photo: wikipedia
1956-ம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.
Photo: pixabay
பேரறிஞர் அண்ணா முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு 1967-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி சட்டசபையில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Photo: wikipedia
பிறகு மத்திய அரசின் ஒப்புதலைத் தொடர்ந்து 1969-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி சென்னை மாகாணம் "தமிழ்நாடு" என்று பெயர் சூட்டப்பட்டது.
Photo: wikipedia
நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு தினமாக கொண்டாட வேண்டும் என 2019-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்
Photo: wikipedia
திமுக அரசு பொறுப்பேற்றதும், தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18ஆம் தேதிதான் தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என 2021ம் ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
Photo: wikipedia
மேலும் நவம்பர் 1-ம் தேதியை எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள் எனவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்!