காதுகளில் பூச்சி புகுந்து விட்டால் என்ன செய்யலாம் தெரியுமா?

Photo: MetaAI
காதில் பூச்சி புகுந்துவிட்டால் முதலில் ஒரு இருட்டறைக்குள் சென்று டார்ச் அல்லது மொபைல் லைட்டை காதில் காட்ட வேண்டும். பூச்சி இனங்கள் வெளிச்சத்தை கண்டு வெளியே வந்துவிடும்.
Photo: MetaAI
ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயில் இருந்தால் அதில் சில துளிகளை காதுகளில் விடலாம். இதுபோன்று செய்வதால் பூச்சி காதில் இருக்க முடியாமல் வெளியே வந்துவிடும்.
Photo: MetaAI
மிதமான சூட்டில் உள்ள நீரில் உப்பு கலந்து அதனை காதுகளில் விடலாம். உப்பு கலந்த நீர் பூச்சிகளுக்கு பிடிக்காது என்பதால் அது உடனே காதுகளில் இருந்து வெளியே வந்துவிடும்.
Photo: MetaAI
பட்ஸ் அல்லது வேறு ஏதேனும் பொருகளை வைத்து எடுக்க முயற்சி செய்யக்கூடாது. இப்படி செய்தால் பூச்சி மேலும் உள்ளே சென்றுவிடும்.
Photo: MetaAI
காதுக்குள் பூச்சி சென்றால் உடனே விரலை வைத்து அதனை அகற்ற முயல வேண்டாம். வலுக்கட்டாயமாக இவ்வாறு செய்வது வலியைத்தான் ஏற்படுத்தும்.
Photo: MetaAI
சிலர் தீக்குச்சியில் மருந்து இல்லாத மறுமுனையை காதுகளில் நுழைத்து எடுக்க முயற்சி செய்வர். அவ்வாறு செய்வது தவறு. இதனால் காதின் உட்புற பகுதி சேதம் அடையக்கூடும்.
Photo: MetaAI
தண்ணீர் மற்றும் எண்ணெய் ஊற்றியும் காதில் உள்ள பூச்சி வெளியே வரவில்லை என்றால் உடனே மருத்துவரிடம் சென்று காண்பிக்க வேண்டும்.
Photo: MetaAI
Explore