தென்னிந்தியாவின் காஷ்மீர் என்று அழைக்கப்படும் லம்பசிங்கி..எங்கு உள்ளது தெரியுமா?
@Lambasingi.facebook
ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள சிந்தப்பள்ளி மண்டலத்தில் அமைந்துள்ள சிறிய கிராமம்தான் ‘லம்பசிங்கி’.
@Lambasingi.facebook
இது “தென்னிந்தியாவின் காஷ்மீர்” என்று அழைக்கப்படும் அளவுக்கு வியப்பூட்டும் இயற்கை அழகையும், சில்லெனும் பனிக்காற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
@Lambasingi.facebook
தென்னிந்தியாவில் பனி பொழியும் ஒரே இடம் என்ற பெருமை இந்த கிராமத்திற்கு உண்டு.
@Lambasingi.facebook
இந்த கிராமத்தில் சில காலங்களில் வெண்மையான பனித்துளிகள் தரையில் பரவிச் செருகும் அதிசயமும் நிகழும்.
@Lambasingi.facebook
இதுதவிர பெருக்கெடுக்கும் நீர்வீழ்ச்சிகள், பளபளக்கும் ஆறுகள், பசுமையான காடுகள் மற்றும் மயக்கும் மலைத் தோட்டங்கள் என இயற்கை அழகு கொட்டி கிடக்கும் இப்பகுதி காண்பவரை கவர்ந்திழுக்கும் அற்புதம் என்றே சொல்லலாம்.
@Lambasingi.facebook
மேலும் இங்கு பராமரிக்கப்படும் காப்பி, மிளகு மற்றும் ஸ்ட்ராபெரி தோட்டங்கள் இயற்கையுடன் இணைந்திருக்கும் விவசாயத்தின் ஒரு வண்ணமயமான பிரதிபலிப்பாக உள்ளன.
@Lambasingi.facebook
கோடைகாலத்தில் சுற்றுலா செல்ல விரும்பினால் இந்த இடம் சிறந்த தேர்வாகும்.