வாய்ப்புண் பொதுவாக எல்லா வயதினரையும் பாதிக்கும். இது ஈறுகள், உதடுகள், நாக்கு மற்றும் கன்னங்களின் உள்பகுதியில் உள்ள மென்மையான திசுக்களில் ஏற்படும்.
இதை ஆப்தஸ் அல்சர் என்று கூறுவார்கள். இது பெரும்பாலும் நீரிழிவு நோயாளிகள், குடல் அழற்சி நோய் (கிரான் நோய்) உள்ளவர்கள். செலியாக் நோய், நோய் எதிர்ப்பு குறைபாடு, பெச்ஜெட் நோய். எச்ஐவி போன்ற நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஏற்படும்.
கூர்மையான பற்களின் மீது சுற்றியுள்ள திசுக்கள் உராயும் போதும் வைட்டமின் ஏ, பி மற்றும் சி குறைபாடு, அதிக ரசாயனம் கொண்ட டூத் பேஸ்ட் பயன்படுத்துவதால் ஏற்படலாம்.
தவறான முறையில் பல் துலக்குவது. மன அழுத்தம், தூக்கமின்மை, வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்று ஆகியவற்றாலும் வாய்ப்புண் ஏற்படலாம்.
ஒரு சில நேரம் அதிகமாக காபி மற்றும் டீ குடித்தல், ஆரஞ்சு, எலுமிச்சை, ஸ்ட்ராபெரி போன்ற பழங்களை அதிகமாக சாப்பிடுதல், மற்றும் எண்ணை பண்டங்களை அதிகமாக சாப்பிடுதல் ஆகியவற்றால் அமிலத்தன்மை அதிகமாகி, வாய்ப்புண்களை ஏற்படுத்தலாம்.
வாய்ப்புண் ஏற்பட்டால் அதை சாதாரணமாக எண்ணிவிடாமல் மருத்துவரிடம் சென்று அப்புண் ஏற்பட காரணங்களை கண்டறிந்து மருத்துவம் செய்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் சில சமயம் உதாசினப்படுத்தப்படும் வாய்ப்புண், புற்றுநோய்க்கும் கூட வழி வகுக்கலாம். அதேபோல் வாய்ப்புண் உள்ளவர்கள் புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்தை தவிர்ப்பது நல்லது.