Photo: MetaAI
Photo: MetaAI

உணவு மீந்துவிட்டால் கவலை வேண்டாம்..இதை செய்யுங்கள்!

Published on
மீதமான தேங்காய் சட்னியை கெட்டியான புளிப்பு மோரில் சேர்த்து ஒரு கொதிக்க விட்டால், சுவையான மோர்க்குழம்பு தயார்.
Photo: MetaAI
மீதமான குழம்பு, சாம்பாரை பயன்படுத்தி சுவையான டிபன் சுலபமாக செய்யலாம். அவற்றில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் வறுத்த ரவையைக் கொட்டிக் கிளறவும். வித்தியாசமான சுவையில் உடனடி கிச்சடி ரெடி.
Photo: MetaAI
பிரட் மீந்து விட்டதா? அதை மிக்சியில் போட்டு பொடியாக்கி, உப்பு, கரம் மசாலா, கொத்தமல்லித் தழை, வெங்காயம் சேர்த்துப் பிசைந்து 'கட்லெட்டாக பொரித்து எடுக்கலாம். சுவையாக இருக்கும்.
Photo: MetaAI
மீந்துவிட்ட தேங்காய் சட்னியை ரவா தோசை மாவில் கலந்து தோசை வார்த்தால் சுவையாக இருக்கும்.
Photo: MetaAI
கொத்தமல்லிச் சட்னி மீந்துவிட்டால், மோரில் சட்னியைப் போட்டுக் கரைத்து விடுங்கள். மசாலா மோர் போல் சுவையாக இருக்கும்.
Photo: MetaAI
இடியாப்பம் மீந்துவிட்டதா? அதை ஒருநாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற வைத்துவிட்டு, நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டால் தேவைப் படும்போது சுவையான வற்றலாக பயன் படுத்தலாம்.
Photo: MetaAI
முட்டைக்கோஸ் மிச்சமாகிவிட்டதா? கோஸை பொடிப்பொடியாக நறுக்கி, அத்துடன் நிறைய வெங்காயத்தையும் நறுக்கிப்போட்டு, இஞ்சி, பச்சை மிளகாய் நறுக்கி, இக்கலவையுடன் கடலைமாவு. அரிசிமாவு, உப்புத் தூள், மிளகாய்ப்பொடி கலந்துகொண்டு லேசாக தண்ணீர் தெளித்துப் பிசைந்து சுவையான பக்கோடா தயார் செய்யலாம்.
Photo: MetaAI
சாதம் மீந்துவிட்டால், அதனுடன் பூண்டு, சோம்பு, காய்ந்த மிளகாய், தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து வடாம் போல பிழிந்து வெயிலில் காய வைக்கவும். இதை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட்டால் மொறுமொறு வென்று இருப்பதுடன், சுவையிலும் அசத்தும்.
Photo: MetaAI

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com