கண்டிப்பாக பார்க்க வேண்டிய சத்ரபதி சிவாஜியின் பிரமாண்ட கோட்டைகள்!
Photo: wikipedia
பிரதாப்காட் கோட்டை: இந்த கோட்டை சத்ரபதி சிவாஜி மன்னரால் 1656-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். மகாபலேஷ்வரில் இருந்து 24 கி.மீ. தூரத்தில் மலையில் அமைந்து உள்ளது. இந்த கோட்டை அதன் தற்காப்பு கட்டிடக்கலைக்கு பிரபலமானதாகும்.
Photo: wikipedia
சிவ்னேரி கோட்டை: இந்த கோட்டை சத்ரபதி சிவாஜி பிறந்த இடமாகும். முக்கோண வடிவில் பாறைகளால் சூழப்பட்டு காணப்படும் இந்த கோட்டை கி.பி. 6-வது நூற்றாண்டை சேர்ந்ததாகும். இங்குள்ள கங்கா, ஜமுனா நீரூற்றுகளில் இருந்து இன்றும் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
Photo: wikipedia
விஜயதுர்க்: மராட்டிய கோட்டைகளில் இதுவே மிகவும் பழமையானது. சிந்துதுர்க்கில் அரபிக்கடலோரம் அமைந்து உள்ள இந்த கோட்டை 12-ம் நூற்றாண்டு இறுதியில் கட்டப்பட்டதாகும்.
Photo: wikipedia
ராய்காட் கோட்டை: மராட்டிய சாம்ராஜ்ஜியத்தின் தலைநகராக இருந்த ராய்காட்டில் உள்ள இந்த கோட்டை மிகவும் பிரமாண்டமானதாகும். சத்ரபதி சிவாஜி 1674-ம் ஆண்டு இங்கு தான் மன்னராக முடிசூட்டினார்.
Photo: wikipedia
லோகாகாட்: 1648-ல் சத்ரபதி சிவாஜி இந்த கோட்டையை கைப்பற்றினார். சூரத் படையெடுப்பில் கிடைத்த ஆபரணங்கள், விலை உயர்ந்த பொருட்கள் வைக்கும் கிடங்காக இந்த கோட்டை பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
Photo: wikipedia
சால்கர் கோட்டை: தரையில் இருந்து 5 ஆயிரத்து 141 அடி உயரத்தில் ஷயாத்ரி மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோட்டை, மராட்டியத்தில் அமைந் துள்ள மிக உயரமான கோட்டையாகும். இந்த கோட்டையில் தான் மராட்டிய படைகள், முகாலய படைகளை வீழ்த்தியது.
Photo: wikipedia
சுவர்ண துர்க் கோட்டை: ரத்னகிரி மாவட்டம் ஹர்னை துறைமுகம் அருகில் சத்ரபதி சிவாஜியால் கட்டப்பட்ட ஒரு தீவு கோட்டையான இது, கப்பல் கட்டும் தளமாகவும் இருந்தது.
Photo: wikipedia
ராஜ்காட்: இந்த கோட்டைக்கு, 'கோட்டைகளின் ராஜா' என்ற பெயரும் உண்டு. 1647-ம் ஆண்டு சத்ரபதி சிவாஜி தனது இளம் வயதில் இந்த கோட்டையை கைப்பற்றினார்.