பானகம்; புளியை தண்ணீரில் கரைத்து அதனுடன் வெல்லம், எலுமிச்சம் பழச்சாறு , சுக்கு, ஏலக்காய் , மஞ்சள், மிளகு, ஜாதிக்காய் பொடி எல்லாவற்றையும் சேர்த்து கரைத்தால் பானகம் தயார். இது உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்.
நீர்மோர்: தயிருடன் நீர் சேர்த்து நன்றாக ஆற்றி வெண்ணையை வடிகட்ட வேண்டும். இந்த நீர் மோரில் இஞ்சி, புதினா, மிளகாய்க்கு பதிலாக சிறிதளவு மிளகுத்தூள், வறுத்த பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் நல்ல செரிமானம் உண்டாகும், உடலுக்கு குளிர்ச்சியை தரும்
சீரக கொத்தமல்லி பானம்: சிறிதளவு சீரகம், கொத்தமல்லி எடுத்து தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து, ஆற வைத்து குடிக்க வேண்டும், இது உடலுக்கு குளிர்ச்சியை தரும், பித்தத்தை அகற்றும்.
கரும்புச்சாறு: கரும்புச் சாறுடன், சிறிதளவு இஞ்சி, எலுமிச்சை சேர்த்து குடித்தால் உடலுக்கு குளிர்ச்சி, சீரணம் தரும். உடல் சூடு, பித்தத்தை தணிக்கும், காமாலை நோயாளிகளுக்கு நல்லது.
லஸ்ஸி: தயிர், சர்க்கரை கொண்டு தயாரிக்கும் இந்த பானம் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. இதனால் உடலுக்கு தேவையான ஆற்றல் மற்றும் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், போன்றவை கிடைக்கிறது.
எலுமிச்சை பழ பானம்: எலுமிச்சை பழச்சாற்றில் சர்க்கரை, சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீரில் கலந்து, புதினா இலை இரண்டு சேர்த்து குடிக்க வேண்டும். இது உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். இதில் உள்ள வைட்டமின் சி சத்து, சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும்.
வில்வப்பழ சர்பத்; வெயில் காலத்திற்கு மிகவும் ஏற்ற பானமாகும். உடலுக்கு குளிர்ச்சியை தரும். குடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். குடல் புண்களை குணப்படுத்தும்.
முலாம்பழச்சாறு: இப்பழத்தில் பீட்டா கரோட்டின் சத்து உள்ளது. இது உடலின் தேவையற்ற கழிவுகளை அகற்றும். ஆரோக்கியமான சருமத்தை உருவாக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும்.