துரியன் பழம்: துர்நாற்றம், ஆனால் நம்பமுடியாத அளவுக்கு நன்மைகள்..!

துரியன் பழம்: துர்நாற்றம், ஆனால் நம்பமுடியாத அளவுக்கு நன்மைகள்..!

Published on
குறிப்பாக இந்தோனேஷியா, மலேசியா மற்றுதாய்லாந்து போன்ற பகுதிகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது. ஊட்டச்சத்துக்களின் அடிப்படையில் துரியன் பழம் நம் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது.
இந்த பழத்தில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்புச்சத்து, ரிபோப்ளேவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்ச்சத்து, துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் உள்பட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.
இதில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை எளிதாக்கி, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பெண்கள் கர்ப்ப காலத்தில் அவர்களின் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க துரியன் பழம் உதவுகிறது.
இதய ஆரோக்கியம் மேம்படுகிறது மற்றும் புற்றுநோயின் அபாயம் குறைகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எலும்புகளின் ஆரோக்கியத்தை சிறப்பாக மாற்றும் தன்மைக்கொண்டது.
துரியனில் உள்ள மாங்கனீசு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பராமரிக்க உதவுகிறது.
மது, புகை, போதை போன்ற தீய பழக்கங்களால், உடல் வலுவிழந்தவர்களுக்கு இந்த பழம், நல்ல மருந்து.
இளமையிலேயே முதுமைத் தோற்றத்தில் காணப்படுபவர்கள், துரியன் பழத்தை சாப்பிட்டு வந்தால், அதிலுள்ள வைட்டமின் சி சத்தால், முதுமைத் தோற்றத்தை தடுக்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com