தேவையான பொருட்கள்: மைதா – 1 கப், கோகோ பவுடர் – ½ கப், சர்க்கரை – ¾ கப், பால் – 1 கப், எண்ணெய் – ½ கப், பேக்கிங் பவுடர் – 1 ஸ்பூன், பேக்கிங் சோடா – ½ ஸ்பூன்
அனைத்து பொருட்களையும், ஒவ்வொன்றாக பாத்திரத்தில் சேர்த்து நன்கு கலக்கவும்.
ஒரு கேக் மோல்டில் எண்ணெய் தடவி கேக் மிக்ஸை ஊற்றவும்.
குக்கரில் உப்பு பரப்பி 5 நிமிடம் மீடியம் தீயில் வைக்கவும்.
இப்போது கேக் மோல்டை குக்கருக்குள் வைத்து மூடிவிட்டு 30–35 நிமிடம் மிதமான சூட்டில் வைக்கவும்.
கேக் வெந்த பிறகு, குளிரவிட்டு மோல்டில் இருந்து வெளியே எடுக்கவும்.
கேக்கின் மீது சாக்லேட் சிரப் ஊற்றவும். பின்னர் ஜெர்ரி பழங்களைக் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.