பெயரே புதுசா இருக்கே...டேஸ்ட் எப்படி இருக்கும்..!

பெயரே புதுசா இருக்கே...டேஸ்ட் எப்படி இருக்கும்..!

Published on
பாக்கர் வாடி, இந்த ஸ்நாக்ஸ் செய்வது மிகவும் சுலபம். இந்த ஸ்நாக்ஸ் 10, 15 நாட்கள் வரை கெட்டு போகாது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, கருப்பு எள், கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பொடி (மாங்காய்த்தூள்), புளித் தண்ணீர், கொப்பரைத் துருவல், வெள்ளை எள், கசகசா, சர்க்கரை, உப்பு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு ஆகியவை.
கொப்பரைத் துருவல், வெள்ளை எள், கசகசா ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து ஒன்றுசேர்த்துப் பொடிக்கவும்.
கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு மூன்றையும் சலித்து… உப்பு, சர்க்கரை, கருப்பு எள், கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பொடி, எண்ணெய் சேர்த்துப் பிசைய வேண்டும்.
பின்பு பிசைந்த மாவை பூரிக்கு மாவை உருட்டுவதைபோல் உருட்டி, அதன் மேல் புளித் தண்ணீரை தடவவும்.
அடுத்ததாக நடுவில் வறுத்துப் பொடித்து வைத்த பொடியை வைக்கவும். இதை பாய் மடிப்பதுபோல் சுருட்டி, இருபுறமும் ஓரங்களை வெட்டி வைக்கவும்.
பின்னர் வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒவ்வொன்றாக போட்டு பொரித்தெடுக்கவும். இப்போது சூப்பரான பாக்கர் வாடி ரெடி.
இதை காற்று புகாத கண்ணாடி டப்பாவில் போட்டு 10, 15 நாட்கள் பயன்படுத்தலாம்.

Related Stories

No stories found.
X

logo
Daily Thanthi
www.dailythanthi.com