நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க!

Photo: MetaAI
இயற்கையில் விளைந்த பழங்களிலும், காய்கறிகளிலும், மூலிகைகளிலும் கொட்டிகிடக்கிறது ஊட்டசத்துக்கள். உடலில் தீங்கு விளைவிக்கும் காரணிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முதலிடம் வகிப்பது வைட்டமின் சி, அடுத்தது வைட்டமின் ஏ மற்றும் பி.
Photo: MetaAI
வைட்டமின் சி பெரிய நெல்லிக்காய், கொய்யாப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, குடைமிளகாய், போன்றவற்றில் வைட்டமின் சி அதிகமாக காணப்படுகிறது.
Photo: MetaAI
வைட்டமின் ஏ அகத்தி கீரை, பொன்னாங்கன்னி கீரை, முருங்கைகீரை, கேரட், சக்கரை வள்ளி கிழங்கு, முட்டை, பப்பாளி பழம், மாம்பழம், பசலைக்கீரை ஆகிவற்றில் உள்ளது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
Photo: MetaAI
வைட்டமின் பி- நோய் எதிர்ப்பு மண்டலத்தின் உயிரி ரசாயன விளைவுகளுக்கு உதவுகிறது. பாதாம், புரோக்கோலி, பால், முட்டை, சிறு தானியங்கள், கீரை வகைகளில் அதிகம் காணப்படுகிறது.
Photo: MetaAI
ஓமேகா 3 பாலி அன்ச்சாச்சுரேட் கொழுப்பு அமிலங்கள் இதயத்தின் வளர்ச்சிதை மாற்றம், அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற திறனை மேம்படுத்துகிறது. சால்மன் மீன், ஆளிவிதை, அவகேடோ, வால்நட், முட்டை, ஆலிவ் ஆயில் ஆகியவற்றில் இது நிறைந்துள்ளது.
Photo: MetaAI
தயிரிலுள்ள நல்ல பாக்டிரியாக்கள் (புரோபயாடிக்) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, உடலுக்கு நல்ல சக்தியையும் அளிக்கிறது. தயிராக இல்லாமல் மோராக தினமும் எடுத்துக்கொள்ளலாம்.
Photo: MetaAI
வைட்டமின் ஈ அடங்கிய பாதாம் அதிக நோய் எதிர்ப்பு சக்தியையும் ஆரோக்கியத்தையும் தரக் கூடியது. இரும்பு சத்து, கால்சியம், நார்ச்சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது.
Photo: MetaAI
உணவுகள் மட்டுமே ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுத்துவிடாது. போதுமான அளவு உடற்பயிற்சியும் அவசியம். இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றது.
Photo: MetaAI
Explore