மூல பிரச்சினையை அதிகரிக்கும் உணவுகள்..தவிர்ப்பது நல்லது..!

உள் மூலம், வெளி மூலம், பௌத்திர மூலம் என பல வகைகள் இருக்கின்றன. இவற்றின் தன்மைகளும் அறிகுறிகளும் வேறு வேறாக இருந்தாலும் விளைவுகள் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
காபின் கலந்த பானங்கள் மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக் கொள்ளவே கூடாத மிக மோசமான உணவுகளில் ஒன்றாகும். ஏனெனில் இது மூலத்தை மேலும் மோசமாக்கும்.
மூல நோயுள்ளவர்கள் இறைச்சியைத் தவிர்ப்பது நல்லது. அதிலும் குறிப்பாக சிவப்பு இறைச்சி ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும்.
மூலத்தினால் பாதிக்கப்பட்டவர் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
மூல நோயுள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய முக்கியமான ஒன்று ஆல்கஹால். இது மலத்தை இறுக்கமடையச் செய்து மலம் கழிக்கும்போது பெரும் அசவுகரியத்தை ஏற்படுத்தக்கூடும்.
மைதா மாவினால் தயாரிக்கப்பட்ட உணவுகளை மூல நோயாளிகள் தவிர்ப்பது மிகவும் நல்லது. இது மலச்சிக்கல் பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும்.
பால் பொருட்களை உட்கொள்வது மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கும். இது மூலத்தை மேலும் மோசமாக்கும்.
கடுமையான மூல பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் மோசமான உணவு என்றால் அது காரமான உணவுகள் தான். இது குடல் இயக்கத்தை மோசமாக்கும். மலம் கழிக்கும்போது ரத்தப் போக்கு ஆகியவை உணடாகலாம்.
Explore