புத்தாண்டில் இருந்து .. நீங்கள் எடுக்க வேண்டிய நிதி சார்ந்த நடவடிக்கைகள்!

புத்தாண்டில் இருந்து .. நீங்கள் எடுக்க வேண்டிய நிதி சார்ந்த நடவடிக்கைகள்!

Published on
'நேரம்' என்பதை பணத்தின் இன்னொரு பரிமாணமாக பார்க்க வேண்டும். பணத்தை சேமிக்க முயற்சிப்பவர்கள் நேரத்தை சேமித்து வையுங்கள். இழந்த பணத்தைக்கூட சம்பாதித்து விடலாம். ஆனால் இழந்த நேரத்தை திரும்ப பெற முடியாது.
மாதத் தவணைகள், கடனுக்காக செலுத்தப்படும் வட்டிகள் ஆகியவற்றை கவனமாகக் கையாள வேண்டும். முடிந்தவரை வட்டியை குறைக்க வேண்டும் அல்லது கடனை முழுவதாக அடைக்க வேண்டும்.
உங்கள் செலவுகள் போக மீதம் இருக்கும் வருமானத்தை ஆக்கப்பூர்வமாக கையாள வேண்டும். வங்கி சேமிப்பு, முதலீடு, பகுதி நேர தொழில் செய்வது போன்றவற்றுக்கு அந்தப் பணத்தை பயன்படுத்தலாம்.
சூரிய சக்தியில் இயங்கும் சாதனங்களை வாங்க ஆர்வம் கொள்வது நல்லது. வாங்கும் போது சற்று அதிகம் செலவழிக்க நேர்ந்தாலும், அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தலாம்.
செல்போன், இருசக்கர வாகனம் மற்றும் இதர வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கும்போது தேவையற்ற அல்லது தேவைக்கு அதிகமாக உள்ள எந்தப் பொருளிலும் பணத்தை வீணாக்குவது, நிதி அபாயங்களில் உங்களை சிக்க வைக்கலாம்.
காப்பீடு திட்டங்களில், குறிப்பாக மருத்துவ காப்பீடு திட்டங்களில் உங்களையும், குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்துக்கொள்வது சிறந்த முடிவு.
உங்கள் ஒரு நாள் சராசரி செலவை திட்டமிடுங்கள். ஒரு நாளுக்கான வரவு-செலவு எவ்வளவு என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் கண்ணுக்குத் தெரியாமல் செய்யும் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த முடியும்.
எதிர்பாராத நேரத்தில் உண்டாகும் சில மருத்துவச் செலவுகளை கையாள்வதற்கு இது உதவி செய்யும். மருத்துவ காப்பீடு திட்டத்தை எடுப்பதற்கு முன்பு அதன் நிறை-குறைகளை ஆராய்ந்து பார்த்துவிட வேண்டும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com