இரும்புச்சத்து அதிகம் நிறைந்த பழங்கள்!

உடல் மற்றும் ரத்தத்தின் சீரான செயலிற்கு இரும்புச் சத்து மிக மிக முக்கியம். இரும்புச் சத்து குறைபாட்டால் பலவித பிரச்சினைகள் ஏற்படும். எந்தெந்த பழங்களில், இரும்புச் சத்து உள்ளது என்பதை காண்போம்.

பேரீச்சம்பழம்: பேரீச்சம்பழத்தில் அதிக அளவில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் பேரீச்சம்பழத்தில் ஒரு நாளுக்கு தேவையான இரும்புச்சத்தில் 50 சதவீதம் நிறைந்துள்ளது.

மாதுளை: மாதுளை இரும்புச் சத்து நிறைந்த, சிறந்த பழமாகும். 100 கிராம் மாதுளையில் 0.3 மில்லிகிராம் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் புரதச்சத்து, மெக்னீசியம், வைட்டமின், பொட்டாசியம், வைட்டமின் பி-6, வைட்டமின் சி, போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.

அத்திப்பழம்: உடலுக்கு உறுதி அளிக்கும் பழங்களில் அத்திப்பழம் மிக மிக சிறந்த பழம் ஆகும். தினமும் ஒரு அத்திப்பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்தசோகை, மலச்சிக்கல் மற்றும் அசதி போன்ற பிரச்சினை இருக்கவே இருக்காது.

கொய்யாப்பழம்: பழங்களில் சிறந்த பழம் கொய்யாப்பழம், மேலும் இது மிகவும் எளிதாக கிடைக்கக்கூடியது பழம். இதில் இரும்புச் சத்து, நார்ச்சத்து, வைட்டமின் சி, புரோட்டீன், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

உலர்திராட்சை: தினமும் ஒரு கைப்பிடி அளவு உலர்திராட்சை உண்டு வந்தால் தேவையான அளவு இரும்புச் சத்து கிடைப்பதோடு உங்கள் ஆரோக்கியமும் மேம்படும்.

மாம்பழம்: முக்கனிகளில் முதன்மை வாய்ந்தது மாம்பழம். இதில் இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது.

தர்பூசணி பழம்: ஒரு தர்பூசணி பழத்தில் 12 மில்லிகிராம் அளவிற்கு இரும்புச் சத்து இருக்கின்றது. மேலும் இதில் ஏராளமான வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது.