கார்த்திகை தீப திருவிழா வரலாறு.!

ஒருநாள் திருமாலுக்கும், பிரம்மனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் உலகமே நடுநடுங்கியது.
திருமாலும், பிரம்மனும் சண்டையிடுவதால் உலகத்தில் பல பிரச்சனைகள் உருவாகும் என்பதால் அதற்கு தீர்வு காண்பதற்காக தேவேந்திரனும், தேவர்களும் அல்லல் தீர்க்கும் அலகில் ஜோதியனை நாடிச் சென்றனர்.
பிரம்மனுக்கும், விஷ்ணுவுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சனையை தீர்த்து உலகை காக்கும்படி கூறி முறையிட்டனர். அவர்களின் துன்பத்தை நீக்க, சிவபெருமான் முன்வந்தார்.
தேவர்களின் துன்பத்தை தீர்க்கவும், திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் ஏற்பட்ட பகை நீங்கவும் இந்த உலக உயிர்களுக்கு அருள் புரிவதற்காகவும் மிகப்பெரிய ஒரு நெருப்பு உருவம் எடுத்து பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் முன்பு ஒளிப்பிழம்பாக உருமாறி நின்றார்.
மிகப் பெரிய நெருப்பு உருவம் தோன்றியதை பார்த்த பிரம்மனும், விஷ்ணுவும் சண்டையை நிறுத்தி ஆச்சரியமாக அந்த ஒளிப்பிழப்பை பார்த்தனர்.
பின்னர் இவ்வளவு பெரிய உருவத்தின் அடிப்பாகத்தையோ அல்லது மேல்பாகத்தையோ யாரால் கண்டுபிடிக்க முடிகிறதோ அவரே பெரியவர் என்று விஷ்ணுவும், பிரம்மனும் முடிவுக்கு வந்தனர்.
பிரம்மன் அன்னப்பறவையின் வடிவம் கொண்டு ஒரு நொடிக்கு லட்சக்கணக்கான மைல் வேகத்துடன் மேலே பறந்து சென்றார். பாதாளங்களுக்கு அப்பால் சென்றும் விஷ்ணுவால் அடியை கண்டு பிடிக்க முடியவில்லை.
மேலே பறந்து சென்ற பிரம்மன் கையில் தாழம்பூ விழுந்தன. பிரம்மன் 'நீ எங்கிருந்து வருகிறாய்' என்று கேட்டார். அதற்கு தாழம்பூ, 'தான் சிவபெருமானின் முடியில் இருந்ததாகவும், தவறி கீழே விழுந்து விட்டதாகவும், 40 ஆயிரம் ஆண்டுகளாக கீழே வந்து கொண்டிருப்பதாகவும்' கூறியது.
உடனே பிரம்மன் வேகமாக கீழே வந்தார். அவர் திருமாலை பார்த்து, 'நான் சிவபெருமானின் முடியை கண்டுவிட்டேன். மேலும் அதில் இருந்து தாழம்பூவை எடுத்து வந்தேன்' என்றார்.
பிரம்மன் சொல்வது உண்மைதான்' என்றது. அந்த நேரத்தில் நெருப்பு மலை வெடித்து பேரொலி கேட்டது. அந்த சத்தத்தால் மூவுலகமும் நடுங்கியது. வெடித்த நெருப்பு மலையில் இருந்து சிவபெருமான் புன்னகையுடன் தோன்றினார்.
அதன்பிறகு சிவபெருமான் பிரம்மனையும், விஷ்ணுவையும் பார்த்து, 'இன்று முதல் இந்த இடம் புனித தலமாக விளங்கும். இந்த ஒளிவடிவான மலை, சிறிய மலையாகி இங்கே நிற்கும்.
இதை சந்தேகப்படுபவர்களுக்கு முக்தி கிடைக்காது' என்று அருளாசி கூறினார். பிரம்மனும், திருமாலும் இந்த மலை மற்ற மலைகளைப் போலவே இருக்க வேண்டும். மலையின் உச்சியின் மீது எப்போதும் ஓர் ஒளி விளங்க வேண்டும் என்று வேண்டினர்.
அதற்கு சிவபெருமான், 'கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் மட்டும் மலையின் மீது ஒளி காட்டுவோம். இந்த ஒளியை காண்போர்க்கு துன்பங்கள் நீங்கும். இந்த ஒளியை கண்டு வணங்குபவரின் 21 தலைமுறைகளுக்கு முக்தி கிடைக்கும்' என்றார்.
அதன்படி தான் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் மகா தீப திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
Explore