மூக்கை சுற்றியுள்ள கருமை மற்றும் வெள்ளை புள்ளிகளை தவிர்ப்பதற்கான வீட்டு குறிப்புகள்..!
சிலருக்கு மூக்கைச் சுற்றி வெள்ளையாக சொரசொரவென்று இருக்கும். இதனை வெள்ளைப்புள்ளிகள் அல்லது ஒயிட் ஹெட்ஸ் என அழைக்கிறோம்.
ஒரு சிலருக்கு கருமையாக இருக்கும். இதை கரும்புள்ளிகள் அல்லது பிளாக் ஹெட்ஸ் என்கிறோம். இதனால் சருமத்தின் மென்மைத்தன்மையை இழப்பதோடு, அந்த இடமும் அசிங்கமாக காணப்படும்.
கரும்புள்ளியை அகற்றுவதற்கான வீட்டுக்குறிப்புகள்: ஸ்ட்ராபெர்ரி பழத்தை வெட்டி அதனைக் கொண்டு நேரடியாக முகத்தை மசாஜ் செய்வதன் மூலம் கரும்புள்ளிகள் நீங்கலாம்.
க்ரீன் டீ பொடியில் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, மூக்கில் தடவி வருவதன் மூலம் கரும்புள்ளிகளை தவிர்க்கலாம்.
வேர்க்கடலையை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் சிறிது பால் சேர்த்து கலந்து, மூக்கின் மேல் தடவி வருவதன் மூலம் கரும்புள்ளிகள் நீங்கி, பொலிவோடு காணப்படும்.
ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, வெள்ளைப்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வந்தால் வெள்ளைப்புள்ளிகள், சருமத்துளைகளும் சுத்தமாக்கலாம்.
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆல்பா ஹைட்ராக்சில் அமிலம், சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி, வெள்ளைப்புள்ளிகள் வருவதை குறைக்கக்கூடும்.
ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு தோலின் பொடியை எடுத்துக் கொண்டு, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி, கழுவி வருவதன் மூலம் கரும்புள்ளிகள் நீங்க வாய்ப்புள்ளது.
தேனைத் தடவி ஊற வைத்து தேய்த்து கழுவ, அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையினால் வெள்ளைப்புள்ளிகள் நீங்கி, சருமம் பட்டுப்போன்று மென்மையாகும்.