சத்துக்கள் நிறைந்த கீரையை தினமும் எந்த அளவு சாப்பிட வேண்டும், அவ்வாறு சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் ரத்தசோகை வருவதை தடுத்து, நல்ல உடல்நலனைப் பெறலாம்.
கீரைகள் சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் `சி’ போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும்.
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 5 வயதிற்குட்பட்ட சுமார் 30 ஆயிரம் சிறு பிள்ளைகள், வைட்டமின் ஏ, குறைபாட்டினால் கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. கீரைகளில் உள்ள வைட்டமின் ‘ஏ’ பார்வை இழப்பை தடுக்கக்கூடும்.
பெண்களுக்கு 100 கிராம், ஆண்களுக்கு 40 கிராம் எடுத்துக்கொள்ளலாம்.
பள்ளி செல்லும் (4-6 வயது) சிறுவர்களுக்கு 50 கிராம் கொடுக்கலாம்.
10 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் 50 கிராம் சாப்பிடலாம்.
கீரைகளை நன்கு சமைத்து, மசித்து கீரையிலுள்ள நார்பொருட்களை நீக்கிய பின்னரே சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.