கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்குமே வங்கிகள் கடன் வழங்குவதில்லை. ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி சிலருக்கு கல்விக் கடன் மறுக்கப்படுகிறது.
freepik
ஒரு மாணவர், எங்கள் தந்தை செய்து வந்த தொழில் தற்போது நலிந்துவிட்டது. கையில் காசு இல்லாததால் படிக்க கடன் கேட்கிறேன் என்று குறிப்பிட்டிருந்ததை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு கடன் மறுக்கப்பட்டுள்ளது.
இதற்கு என்ன காரணம் என்றால், வங்கிக் கடனை திருப்பிச் செறுத்துவதற்கான நம்பிக்கை இங்கு குறைகிறது. வீட்டில் மாத வருமானமே நிரந்தரமில்லாத நிலையை இந்த வாக்குமூலம் உணர்த்துகிறது.
freepik
உயர் கல்வி பயில கடன் அளித்தால், அதைக் கொண்டு படித்து முடித்து அந்த கடனை அடைப்பேன் என்று ஒரு மாணவர் குறிப்பிட்டிருந்தால் அவருக்கு கடன் அளிக்க வங்கி முன்வருகிறது.
freepik
அங்கீகரிக்கப்படாத கல்வி நிலையம் அல்லது குடும்ப மாத வருமானம் மிகக் குறைவாக இருப்பது போன்றவையும் கல்விக் கடன் நிராகரிக்கப்பட காரணங்களாகும்.
metaAI
சரியான கல்வித் தரம் இல்லாத கல்வி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கும் கல்விக் கடன் நிராகரிக்கப்படுகிறது. அந்த கல்வி நிலையத்தில் தேர்ச்சி பெற்று வரும் மாணவர்கள், உயர்ந்த நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறனுடன் இருக்க மாட்டார்கள். இதனால் அவர்களுக்கு வேலை கிடைப்பது தாமதமாகும் என்பதே காரணமாகும்.
metaAI
எந்த விதமான காரணமும் இன்றி, ஒரு மாணவருக்கு கல்விக் கடன் நிராகரிக்கப்பட்டால், அவர் வங்கியின் மேலதிகாரியிடம் இது குறித்து புகார் அளித்துவிட்டு, வேறொரு வங்கியில் கல்விக் கடன் கோரி விண்ணப்பித்து கடன் பெறலாம்.
metaAI
கடனுக்கான ஆவணங்கள் :அரசு அதிகாரியின் சான்று பெற்ற (அட்டஸ்டட்) மாணவரது பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடியிருப்புச் சான்றிதழ். கல்விக் கடனுக்கு ஈடாக ஏதேனும் சொத்தை ஜாமீனாக வைப்பின் அதன் அரசு மதிப்புச் சான்றிதழ்.
metaAI
விண்ணப்பிக்கும் மாணவரது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாணவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் மற்றும் அவருக்கு ஜாமீன் கையெழுத்து போடுபவரது புகைப்படம்
metaAI
மதிப்பெண் சான்றிதழ் அல்லது முந்தைய கல்வித் தகுதிக்கான சான்றிதழின் நகல்கள் மற்றும் மாணவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தற்போதைய வருமானச் சான்றிதழ்.
metaAI
கல்விக் கடன் கோரி விண்ணப்பிக்கும் மாணவரது அல்லது அவரது பெற்றோரது அல்லது ஜாமீன் கையெழுத்து போடும் நபரது கடந்த 6 மாதத்திற்கான வங்கிக் கணக்கு அறிக்கை
metaAI
வெளிநாட்டு படிப்பிற்கு விண்ணப்பித்திருப்பின், பாஸ்போர்ட் அல்லது விசா, விமானக் கட்டணத்திற்கான ரசீது போன்றவற்றை மாணவர் சமர்ப்பிக்க வேண்டும்.