தேவையான பொருட்கள் : பனை வெல்லம்(கருப்பட்டி), பச்சை அரிசி, இட்லி அரிசி, உளுத்தம் பருப்பு, துவரம்பருப்பு, வெந்தயம், ஏலக்காய், சமையல் சோடா, உப்பு, நெய் அல்லது எண்ணெய்
செய்முறை : முதலில் அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம், துவரம் பருப்பு ஆகியவற்றைக் கழுவி 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் மிக்சியில் குறைந்த அளவு தண்ணீர் சேர்த்து மென்மையாக பாகு பதத்திற்கு அரைக்கவும்.
பனை வெல்லத்தை (கருப்பட்டி) பொடியாக்கி கொள்ளவும்.
அடுத்து அரைத்த மாவில் பனை வெல்லம், உப்பு (சிறிதளவு) சேர்த்து குறைந்தது 3 மணி நேரம் தனியாக வைக்கவும்.
பின்னர் 3 மணி நேரத்திற்குப் பிறகு பொடித்த கருப்பட்டியை நன்கு கரையும் வரை கலக்கவும்.
பணியாரம் செய்வதற்கு முன், அதில் சமையல் சோடா, பொடித்த ஏலக்காய் சேர்த்து நன்கு கலக்கவும்.
பணியாரம் பாத்திரத்தை சூடாக்கி, நெய் தடவி, மாவை ஊற்றி மிதமான தீயில் வைத்து ஒருபக்கம் வெந்தவுடன் திருப்பி போட்டு பொன்னிறமாக வந்தவுடன் பணியார கம்பியை பயன்படுத்தி எடுத்துத் வைக்கவும்.
சுவையான ஆரோக்கியம் நிறைந்த கருப்பட்டி பணியாரம் ரெடி.