தேவையான பொருட்கள்: நல்லி எலும்பு, வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகு தூள், சீரகப் பொடி, மஞ்சள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
Photo credit : metaAI
தாளிக்க : இஞ்சி பூண்டு பேஸ்ட், கொத்தமல்லி, மிளகு ஆகியவை
Photo credit : metaAI
செய்முறை: நல்லி எலும்பை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
Photo credit : metaAI
குக்கரில் நன்கு சுத்தம் செய்யப்பட்ட ஆட்டுக்காலை போட்டு தண்ணீர் ஊற்றி அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு கிளறவும்.
Photo credit : metaAI
பின்னர் உப்பு, சிறிது கொத்தமல்லி தழை, மிளகு தூள், வெங்காயம், சீரகப் பொடி, மஞ்சள் சேர்த்து நன்குக் கலந்து குக்கரை மூடி அடுப்பில் குறைவான தீயில் 30 நிமிடங்கள் வேக வைக்கவும்.
Photo credit : metaAI
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
Photo credit : metaAI
பின் வேக வைத்த மட்டன் தண்ணீரை ஊற்றவும். இறுதியாக மிளகு தூள், கொத்தமல்லி தழை தூவி ஒரு கொதி வந்ததும் இறக்கவும். இப்போது காரசாரமான நல்லி எலும்பு ரசம் தயார்.