கண் பார்வையை மேம்படுத்த சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!

credit: freepik
கணினி, ஸ்மார்ட்போனை அதிக நேரம் பார்வையிடுவது கண் ஆரோக்கியத்தை பாதிக்கும். கண் பார்வையை மேம்படுத்துவதற்கு சாப்பிட வேண்டிய உணவுகளின் பட்டியல் உங்கள் பார்வைக்கு...
credit: freepik
நட்ஸ் வகைகளில் பாதாம் கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். பாதாமில் வைட்டமின் ஈ உள்ளது. பொதுவாக வைட்டமின் ஈ உள்ளடக்கிய உணவு பொருட்களை உட்கொள்வது கண்புரை மற்றும் மாகுலர் சிதைவைத் தடுக்க உதவும்
credit: freepik
கேரட், கண் பார்வை திறனை அதிகரிக்கச்செய்யும் சக்தி கொண்டது. அதில் வைட்டமின் ஏ உடன் பீட்டா கரோட்டின்களும் அதிகம் நிரம்பப்பெற்றுள்ளன. வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் இவை இரண்டுமே கண் தொடர்பான ஆபத்துக்களை தவிர்க்க உதவும்.
credit: freepik
பச்சை இலை காய்கறிகளில் லுடீன் மற்றும் ஜியாசாந்தின் உள்ளன. இவை இரண்டுமே ஆன்டி ஆக்சிடெண்டுகள் கொண்டவை. தெளிவான பார்வை திறனுக்கு வித்திடுபவை.
credit: freepik
ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி மற்றும் திராட்சைப்பழங்கள் போன்றவை கண்களுக்கு நன்மை பயக்கும் வைட்டமின் சி நிறைந்துள்ளது இந்த சிட்ரஸ் பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடெண்டுகள் அதிகம் உள்ளன.
credit: freepik
டுனா, சால்மன், கானாங்கெளுத்தி, நெத்திலி, மத்தி மற்றும் ட்ரவுட் போன்ற மீன் வகைகளில் லீன் புரதங்கள் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை கண்களுக்கு நலம் சேர்ப்பவை.
credit: freepik
முட்டையும் கண் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவாகும். முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ, லுடீன், ஜியா சாந்தின், துத்தநாகம் ஆகியவை காணப்படுகின்றன. அவை கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த வல்லவை.
credit: freepik
Explore