ஞாபக சக்தியை அதிகரிக்க சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!
credit: freepik
மூளையின் செயல்பாட்டிற்கு உதவும் உணவு வகைகளில் சிறந்து விளங்குபவை மீன் உணவுகள் ஆகும். டுனா, சாலமன், சார்டைன் உள்ளிட்ட மீன்களில், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் உள்ளன.
credit: freepik
பெர்ரி பழங்களில் குவர்செடின் என்னும் மூளைச் செல்களில் இயக்கத்தை அதிகரிக்கும் பொருள் உள்ளது. அதிலும் சில பெர்ரி பழங்களான ராஸ்ப்பெர்ரி, ப்ளூபெர்ரி போன்றவை மிகவும் சிறந்தது.
credit: freepik
பச்சை இலை வகைகளான கீரைகள், புரோக்கோலி உள்ளிட்டவைகளில் உள்ள அத்தியாவசிய வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்கள், மூளையின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளுக்கு சிறந்த முறையில் துணைபுரிகிறது.
credit: freepik
மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் செல்களின் முக்கியமானது தான் கோலைன் சத்து. இது முட்டையில் அதிகம் இருக்கிறது.
credit: freepik
கிரீன் டீயில் மூளைச் செல்கள் பாதிப்படையாமல் தடுக்கும், பாலிபீனால் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. எனவே இதனை குடிப்பதால் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, சோர்வான மனநிலை மாறும்.
credit: freepik
தேனில் அளவற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. அவற்றில் ஞாபக சக்தியை அதிகரிப்பதும் ஒன்று. எனவே தினமும் காலையில் எழுந்து ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட்டால், எடை குறைவதோடு, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
credit: freepik
நட்ஸில் மூளையின் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ மற்றும் பி6 இருக்கிறது. எனவே தினமும் ஒரு கை பாதாம், பிஸ்தா போன்றவற்றை சாப்பிடுவது, ஞாபக சக்திக்கு மட்டுமின்றி, முழு உடலுக்கும் நல்லது.
credit: freepik
தண்ணீர் குறைவானால் மூளையில் செயல்பாடும் குறைந்து, மூளையில் வறட்சி ஏற்பட்டு ஞாபக சக்தியும் குறைந்துவிடும். அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால், மூளைச்செல்கள் சுறுசுறுப்போடு செயல்படும்.