இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முக்கிய வழிமுறைகள்!
credit: freepik
பழங்கள், காய்கறிகளில் இதயத்தைப் பாதுகாக்க உதவும் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பைட்டோ கெமிக்கல் கள் உள்ளன. எனவே தினமும் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்ளவும்.
credit: freepik
நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முழு தானிய உணவுகள் இதய ஆரோக்கியத்திற்கு உதவும். சுத்திகரிக்கப்பட்ட தானியங்களுக்கு மாற்றாக ஓட்ஸ், பழுப்பு அரிசி, பாஸ்தா போன்ற முழு தானியங்களை சேர்க்கவும்.
credit: freepik
உடல் எடையை கட்டுக்குள் வையுங்கள். இது கொழுப்பின் அளவை மேம்படுத்தும், ரத்த அழுத்தத்தையும், வீக்கத்தையும் குறைக்கும்.
credit: freepik
பாதாம், முந்திரி, வால்நட்ஸ் மற்றும் வேர்க்கடலை இதயத்தை பாதுகாக்க துணைபுரிபவை. அவற்றில் நார்ச்சத்து, பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், மெக்னீ சியம் மற்றும் வைட்டமின் ஈ உள்ளன.
credit: freepik
உணவில் அதிக உப்பு சேர்த்துக்கொள்வது ரத்த அழுத்த அளவை அதிகரிக்கும். இதய நோய் அபாயத்தை ஏற்படுத்தும். ஏற்படுத்தும்.பதப்படுத்தப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் உப்பு உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துங்கள்.
credit: freepik
மாரடைப்பு அபாயத்தை மூன்றில் ஒரு பங்கு குறைக்க, தினமும் குறைந்தது 30-40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய இலக்கு நிர்ணயிங்கள்.
credit: freepik
மதுவும், புகைப்பழக்கமும் இதயத்துக்கு எதிரிகள். அவற்றை தவிர்ப்பது அவசியமானது.