10 நிமிடத்தில்...வாயில் வைத்ததும் கரையக்கூடிய நெய் பிஸ்கட்..!

தேவையான பொருட்கள்: மைதா, சர்க்கரை, நெய், பேக்கிங் சோடா சிறிதளவு உப்பு, பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவை.
முதலில் மைக்ரோவேவ் ஓவனை 170 டிகிரியில் சூடு பண்ண வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு சேர்க்க வேண்டும். அதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் சர்க்கரையை மிக்சியில் போட்டு நன்கு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின் அரைத்த சர்க்கரை பொடியை, மைதா மாவில் கொட்டி நன்கு கலந்துக்கொள்ள வேண்டும்.
அதில் நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அந்த கலவை பால்கோவா பதத்தில் இருக்க வேண்டும்.
பிசைந்து வைத்துள்ள மைதா மாவு கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பேக்கிங் ட்ரேயில் வைக்க வேண்டும்.
அடுத்து பிஸ்தா, முந்திரி, பாதாம் போன்றவற்றை உருண்டைகளின் மேலே வைக்கலாம் அல்லது உள்ளே வைத்து உருட்டி பேக் பண்ணலாம்.
உருட்டி எடுத்த எல்லா உருண்டைகளையும் பேக்கிங் ட்ரேயில் வைத்து 10 நிமிடங்களுக்கு பேக் பண்ணி எடுத்தால் ஆரோக்கியமும், சுவையும் நிறைந்த நெய் பிஸ்கட் ரெடி!