காளான் பற்றிய சுவாரசிய தகவல்கள்..!

இன்றைய காலத்தில் பலரது விருப்ப உணவாக இருப்பது காளான்கள். அவை பற்றி அறிந்து கொள்வோம்!

கிரேக்கர்களும், ரோமானியர்களும்தான் காளான்களை முதன் முதலில் உணவாக உட்கொண்டவர்கள்.

காளானில் அதிக அளவு புரதச்சத்தும், மிகக்குறைந்த அளவு கொழுப்புச்சத்தும் காணப்படுகிறது.

அமினோ அமிலங்கள், தாது உப்புக்கள், நார்ச்சத்து, சாம்பல் சத்து ஆகியனவும் காளானில் உள்ளன.

தென் அமெரிக்காவின் டைரா லெபியுகோ பகுதியில் வசிக்கும் பழங்குடியினர்களின் முக்கிய உணவாக காளான் இருக்கிறது.

சீனா, உலகளாவிய காளான் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்தியாவில் மொட்டுக்காளான், சிப்பிக்காளான், பால் காளான் ஆகியன வளர்க்கப்படுகின்றன.

காளான்களில் உள்ள அமிலங்கள் எளிதில் செரிமான சக்தியை ஊக்குவிக்கின்றன.