சுவாரசியமான மிதக்கும் சந்தை..!

இடங்களை மட்டும் பார்க்காமல் உங்கள் பயணக் கதைகளில் கொஞ்சம் சுவாரசியம் சேர்க்க விரும்பினால் அதற்கு மிதக்கும் சந்தைகள் கூடுதல் சுவாரசியமாக இருக்கும்.
தாம்நோன் சாதுவாக் மிதக்கும் சந்தை, தாய்லாந்து: பாங்காக்கில் அமைந்துள்ள இந்த துடிப்பான சந்தை அதன் வண்ணமயமான படகுகளுக்கு பிரபலமானது. இங்கு கடல் உணவுகள் மற்றும் கையால் செய்யப்பட்ட பொருட்களைக் கண்டறிய சிறந்த இடமாகும்.
சிவப்பு தாமரை மிதக்கும் சந்தை, தாய்லாந்து: அழகியல் பொங்கும் இந்த சந்தை, தாமரை மலர்களின் அழகிய காட்சியுடன் உங்களை வரவேற்கும்.
தால் ஏரி மிதக்கும் சந்தை, இந்தியா :ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் அமைந்துள்ளது. இங்கு பாரம்பரிய மரப் படகுகளிலிருந்து பூக்கள், உணவு பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களை விற்பனைக்கு சிறந்தது.
ஆம்பாவா மிதக்கும் சந்தை: தாய்லாந்தில் உள்ள சமுத் சோங்க்ராம் மாகாணத்தின் அம்பாவா மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபலமான மிதக்கும் சந்தையாகும்.
பஞ்சார்மசின் மிதக்கும் சந்தை: இந்தோனேசியாவின் தெற்கு கலிமந்தனில் உள்ள பஞ்சர்மாசின் நகரில் அமைந்துள்ளது. இந்த சந்தை, பரபரப்பான நீர் போக்குவரத்திற்கு பிரபலமானது.
இன்லே ஏரி மிதக்கும் சந்தை, மியான்மரில் உள்ள இந்த சந்தை ஒரு துடிப்பான மற்றும் வண்ணமயமான இடமாகும்.
பட்டாயா மிதக்கும் சந்தை, தாய்லாந்து கடற்கரைகளில் இருந்து ஓய்வு எடுத்து, இந்த மிதக்கும் சந்தையில் சிறிது நேரம் செலவிடலாம். இந்த சந்தையானது தாய்லாந்து பாரம்பரிய மிதக்கும் சந்தைகளின் நவீன வடிவமாகும்.
Explore