இரும்பு சமையல் பாத்திரங்கள் பராமரிப்பு.!

metaAI
இரும்பு பாத்திரங்களை அதிக நேரம் தண்ணீரில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
metaAI
சமைக்கும்போது உணவுப் பொருட்கள் இரும்பு பாத்திரத்தில் அடிப்பிடித்து இருந்தால், அவற்றை 15 நிமிடங்களுக்கு மிதமான சுடுநீரில் ஊறவைத்து தேய்த்தால் சுத்தமாகிவிடும்.
metaAI
இரும்பு பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு, முடிந்தவரை இளம் சூடான நீரையே பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் அவை துருப்பிடிப்பதை தடுக்க முடியும்.
metaAI
இரும்பு பாத்திரங்களை சுத்தம் செய்த பிறகு இரும்பு பாத்திரங்களை வெயிலில் உலர்த்துவதும் அவசியமானதாகும்.
metaAI
புதிதாக வாங்கிய இரும்பு பாத்திரங்களை நேரடியாக சமையலுக்கு பயன்படுத்துவது சற்றே சிரமமானது. அதில் நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய், செக்கு எண்ணெய் ஆகியவற்றில் ஏதாவது ஒரு எண்ணெய்யை நன்றாக பூசவும்.
metaAI
புதிதாக வாங்கிய இரும்பு பாத்திரத்தில் தக்காளி, ஆப்பிள் சாஸ், புளி, வினிகர், ஒயின், எலுமிச்சை போன்ற புளிப்பு சுவை நிறைந்த உணவுகளை சமைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
metaAI
புளிப்பானது பாத்திரத்தில் படிந்து அதை விரைவாக துருப்பிடிக்கச் செய்யும். ஆகையால் வாங்கிய ஒரு மாதம் வரை புளிப்பு உணவுகளைத் தவிர்த்து மற்ற உணவுகளை சமைக்கலாம்.
metaAI
இரும்பு பாத்திரத்தை துடைத்து வைக்கும்போது அதில் சிறிது எண்ணெய் பூசி வைப்பது நல்லது. இதை உணர்த்தும் வகையிலேயே இரும்பு தோசைக்கல்லை அடிக்கடி தேய்த்துக் கழுவக் கூடாது என்று கூறுவார்கள்.
metaAI
Explore