மதிய தூக்கம் மூளைக்கு நல்லதா?

using all photos freepik
மதிய உணவு உட்கொண்ட பிறகு குட்டி தூக்கம் போடுவது மூளைக்கு நல்லது. அதிகபட்சமாக 20 முதல் 30 நிமிடங்கள் தூங்கலாம்.
இந்த குறுகிய தூக்கம் நினைவாற்றலை மேம்படுத்தவும், அன்றைய தினம் மதியம் வரை கற்றுக்கொண்ட, கேட்டறிந்த விஷயங்களை நினைவில் பதிவு செய்யவும் உதவும்.
இந்த குட்டி தூக்கம் உற்சாக மன நிலையை அதிகரிக்க செய்து சுறுசுறுப்புடன் செயல்படவும், மன அழுத்தத்தை குறைக்கவும் வித்திடும்.
மதியம் ஒரு மணி முதல் மாலை 4 மணிக்குள் இந்த குட்டி தூக்கத்தை போடலாம்.
ஆனால் 30 நிமிடங்களை தாண்டிவிடக்கூடாது. அதற்கு மேலும் தூக்கம் நீடித்தால் குறிப்பாக 90 நிமிடங்களை கடந்தால் நினைவில் கொள்ளும் திறனில் சிரமத்தை ஏற்படுத்தும்.
இந்த பகல் நேர குட்டி தூக்கம் வயதாகும்போது மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் இருக்கும் 'யூனிவர்சிட்டி காலேஜ் லண்டன்' என்ற பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் பகல் நேரத்தில் தொடர்ந்து (30 நிமிடங்கள்) குட்டி தூக்கம் போடுவது மூளை வயதாகும் வேகத்தை ஆறரை ஆண்டுகள் வரை குறைப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Explore