அளவுக்கு அதிகமாக பிஸ்கட் சாப்பிடுவது கெட்டதா?

credit: freepik
பிஸ்கட்டில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துப் பொருட்கள் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம். அநேகமாக எல்லா வகை பிஸ்கட்டுகளிலும் சர்க்கரை அளவு அதிகமாகத் தான் இருக்கும்.
credit: freepik
உடலுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய கெட்ட கொழுப்பு அதிகமாக இதில் உள்ளது. தினமும் தொடர்ந்து பிஸ்கட் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கலை உண்டுபண்ணிவிடும்.
credit: freepik
பிஸ்கட்டில் அதிக கலோரி இருப்பதால் தினமும் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடையை கூட்டிவிடும்.
credit: freepik
பிஸ்கட்டில் 'டிரான்ஸ்பேட்' என்று சொல்லக்கூடிய மாறுபட்ட கொழுப்பு இருக்கும். இந்த மாறுபட்ட கொழுப்பு தீய கொலஸ்ட்ரால் அளவுகளை அதிகமாக்கியும் நல்ல கொலஸ்ட்ரால் அளவுகளை குறைத்தும்விடும்.
credit: freepik
அதிக கலோரி, அதிக மாவுச்சத்து, அதிக கொழுப்பு, அதிக அளவில் சோடியம் உப்பு, அதிக சர்க்கரை ஆகியவை இருப்பதால் அன்றாடம் பிஸ்கட் சாப்பிடுபவர்களுக்கு அஜீரணம், மந்தம், மலச்சிக்கல் போன்ற கோளாறை உண்டுபண்ணிவிடும்.
credit: freepik
பிஸ்கட்டில் தண்ணீரின் சதவீதமும் குறைவாக உள்ளது. இதனால் இதை அதிகம் சாப்பிடுவதால் உடல் வறட்சி அடையும்.
credit: freepik
அளவுக்கு அதிகமாக இதை சாப்பிடுபவர்கள் இதய நோய் அபாயத்திலும் சிக்கக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
credit: freepik
Explore