credit: freepik
credit: freepik

மருத்துவ குணம் கொண்ட மாதுளை தோலின் நன்மைகள்!

Published on
உணவில் சேர்க்கக்கூடிய பதத்திற்கு மாதுளை தோலை வெயிலில் உலர்த்தி, நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால், கடைகளிலேயே மாதுளை தோல் பொடியை வாங்கிக்கொள்ளலாம். மாதுளையின் தோலில் புரதம், பீனாலிக் கலவைகள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பொட்டாசியம், நார்ச்சத்து முதலானவை நிறைந்துள்ளது.
credit: freepik
மாதுளையின் தோலில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு சேர்மங்கள் நிறைந்துள்ளதால் சளி, இருமல் தொண்டை வலி முதலானவற்றைப் போக்க உதவுகிறது.
credit: freepik
இதிலுள்ள நார்ச்சத்து, அழற்சி எதிர்ப்பு பண்புகள், வயிற்று வீக்கம், தொற்று முதலானவற்றை குறைத்து ஒட்டுமொத்த செரிமான பிரச்சனைகளையும் சரி செய்து குடல் இயக்கத்தை ஆரோக்கியமாக மாற்றுகிறது.
credit: freepik
சிறிதளவு மாதுளை தோல் பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வரலாம். இதனால் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாடு சீரான முறையில் இயங்கி நச்சுகளை வெளியேற்றும்.
credit: freepik
மாதுளை தோல் பொடியை தேன் மற்றும் தயிருடன் கலந்து முகத்தில் தடவினால் முகம் பளபளப்பாக மாறும். மேலும் சருமத்தை சூரிய ஒளியினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கிறது.
credit: freepik
வயதான தோற்றத்தை தடுத்து, கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து முக சுருக்கங்கள் முதலானவற்றை தடுப்பதில் பங்கு வகிக்கிறது.
credit: freepik
எல்லாவற்றிற்கும் மேலாக மாதுளை தோலானது நமது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதிலுள்ள ஆக்ஸிஜனேற்றிகள் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் கெட்ட கொழுப்பின் அளைவைக் குறைக்கிறது.
credit: freepik

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com