வாரம் நான்கு நாட்கள் நேந்திர வாழைப்பழம் சாப்பிடலாமா?

நேந்திர வாழைப்பழம் நார்ச்சத்து, வைட்டமின்கள் ஏ,சி மற்றும் தாதுக்கள் (பொட்டாசியம், மெக்னீசியம்) நிறைந்த ஒரு ஊட்டச்சத்து மிகுந்த பழமாகும்.
நேந்திர வாழைப்பழம் அதிக நார்ச்சத்தின் மூலமாகும். இது செரிமான மண்டலத்தை சீராக வைத்து, மலச்சிக்கலைத் தடுக்கிறது.
இதில் உள்ள குளுக்கோஸ், பிரக்டோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகள் இருப்பதால் உடனடி ஆற்றலைத் தருகிறது.
நேந்திர வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.
இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் எலும்புகளை வலுப்படுத்த உதவுகின்றன.
நேந்திர வாழைப்பழத்தில் நிறைந்துள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகின்றன.
இதில் உள்ள வைட்டமின் B6 மூளையின் வளர்ச்சிக்கும், நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கும் உதவுகிறது.
சருமத்திற்கு ஆரோக்கியம் மற்றும் முடி வளர்ச்சிக்கு நேந்திர வாழைப்பழம் சிறந்த தேர்வாகும்.
Explore