all photo using metaAI
all photo using metaAI

பள்ளி மதிய உணவிற்கு குழந்தைகளுக்கு ஸ்பெஷல் தக்காளி சாதம் செய்வது எப்படி?

Published on
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதியம் வெரைட்டி சாதம் செய்து கொடுக்க விரும்பினால் ஸ்பெஷல் தக்காளி சாதம் செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள் : உதிராக வடித்த சாதம் - 2 கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 6, பச்சை மிளகாய் - 3, மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சிறிதளவு, கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன், நெய் - 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு.
பொடிக்க (முதல் வகை) : பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2, கசகசா 2 - டீஸ்பூன், முந்திரி - 6, எண்ணெய் - 1 டீஸ்பூன்.
மற்றொரு வகை பொடிக்கு: தனியா, துவரம் பருப்பு- 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 4, கொப்பரை தேங்காய்த் துருவல் - 3 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 1 டீஸ்பூன்.
செய்முறை :பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள 2 வகைகளை வெறும் கடாயில் தனித்தனியாக போட்டு வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். மிளகாயை இரண்டாக கீறி வையுங்கள்.
வாணலியில் எண்ணெய், நெய்யைக் காய வைத்து கடுகு, உளுந்து போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி தக்காளி குழைய வதங்கியதும் இறக்கவும்.
இந்த தொக்கை சாதத்தில் போட்டு அதனுடன் பொடித்த 2 பொடிகள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்துக் நன்றாக கலந்து பரிமாறுங்கள். சுவையான ஸ்பெஷல் தக்காளி சாதம் ரெடி.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com