பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளால், நடுக்காதில் ஏற்படும் நோய்களால் தான் காதில் பிரச்சினை ஏற்படுகிறது.
காதிலிருந்து வடியும் சீழ் திரவமானது, காதிற்குள்ளே ஏற்படும் நோய் காரணமாகவே ஏற்படுகிறது.
இந்த பாதிப்புகள் பொதுவாக சிறிய வயது குழந்தைகளுக்கு, அடிக்கடி அதிகமாக காணப்படும் பிரச்சினைகளாகும். பெரியவர்களுக்கும் இந்தப் பிரச்சினைகள் வருவதுண்டு.
நோயின் காரணமாக காது ஐவ்வின் பின்புறம் சீழ் பிடிக்க ஆரம்பித்து, சீழ் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து அதிகமாகி, காது ஐவ்வை வெடித்துக் கிழித்துக் கொண்டு, வெளியே வடிவதுண்டு.
ஒரு வெங்காயத்தின் மேல் தோலை விட மிகவும் மெல்லிய மற்றும் மென்மையாக இருக்கும். மேலும் மிக முக்கியமான உறுப்பாகும்.
காதில் எது வடிந்தாலும் அதை மிக முக்கியமான பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டும். விளையாட்டாக, கவனமில்லாமல் இருக்க வேண்டாம்.
காதில் குச்சி, பேப்பர் , கோழி இறகு, பென்சில், பட்ஸ் போன்றவைகளை விட்டு, சுத்தம் பண்ணுகிறேன் என்று சொல்லிக் கொண்டு குடைவது கூடாது. இதனால் கெட்ட கிருமிகள் காதுக்குள் செல்ல வாய்ப்புகள் அதிகம்.
குழந்தைகள் காதிற்குள் கம்பி, பட்டன் , மணி, உணவுத்துண்டுகள் போன்றவற்றை யாரும் பார்க்காத நேரத்தில் மிகச் சாதாரணமாக போட்டு விடுவதுண்டு. மிக அதிக கவனம் தேவை.
காதில் கடுமையான வலி, வீக்கம், சீழ் வடிதல் போன்ற பிரச்சினைகள் ஆரம்பித்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.