காரைக்குடி ஸ்டைல்.. சுவையான முட்டைக்குழம்பு செய்வது எப்படி?

பல மசாலா பொருட்களை கொண்டு செய்யும் இந்த முட்டை குழம்பு சுவையாக இருக்கும். இந்த முட்டை குழம்பு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : வேக வைத்த முட்டை , இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, வெங்காயம், தேங்காய் துருவல், காஷ்மீரி வர மிளகாய், ஜாதிக்காய் கசகசா, தனியா, சோம்பு, சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு, தக்காளி எண்ணெய், கொத்தமல்லி - ஆகியவை
செய்முறை : வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு, கசகசா, தனியா, ஜாதிக்காய், காஷ்மீரி வர மிளகாய், பட்டை, ஏலக்காய், கிரம்பு, சீரகம் சேர்த்து வறுத்து கொள்ளவும்.
பின்னர் வறுத்த பொருட்களை ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு அதனுடன் தேங்காய் துருவலையும் சேர்த்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து, பொன்னிறமாக வதக்கவும்.
பின் அதில் மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி, அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து மிதமான தீயில் தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும்.
பின்பு அதில் வேக வைத்துள்ள முட்டையை இரண்டாக வெட்டிப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், முட்டை குழம்பு ரெடி.